Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சையில் சிக்கிய மக்ரோன்!!

சர்ச்சையில் சிக்கிய மக்ரோன்!!

21 வைகாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 3591


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இருவரும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்ட காணொளி ஒன்று இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சந்திப்பின் போது தையிப் எர்டோகன் (Tayyip Erdogan) இருக்கையை விட்டு எழும்பவில்லை எனவும், இருக்கையில் அமர்ந்தவண்ணமே மக்ரோனுக்கு கை குலுக்கியுள்ளார் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். மற்றுமொரு பிரிவினர் கை குலுக்கல் முறையே சரியில்லை எனவும், ‘வித்தியாசமான’ கை குலுக்கல் முறையாக இருந்தது எனவும், அது அவமானகரமாக இருந்தது எனவும் தெரிவிக்கின்றனர்.

எர்டோகன் கைகளை குவித்து பிடித்திருக்க, மக்ரோனது நடு விரல் எர்டோகனது கைகளுக்குள் சிக்கியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மக்ரோன் யாராலும் நேரிக்கப்படுவதில்லை. அவர் யாராலும் மதிக்கப்படுவதில்லை...  அவர் குறித்து அச்சப்படுவதும் இல்லை என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்