15 வயதுக்கு கீழுள்ள சிறுமிகளுக்கும் ‘புர்கா’ உடை அணிய தடை!!

21 வைகாசி 2025 புதன் 10:46 | பார்வைகள் : 820
பொது போக்குவரத்துக்களில் பயணிக்கும் இஸ்லாமிய சிறுமிகள் ‘புர்கா’ அணிய தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முன்னாள் பிரதமர் Gabriel Attal இதனை முன்மொழிந்துள்ளார். ஏற்கனவே பாடசாலைகளில், கல்லூரிகளில், கடற்கரைகளில் புர்கா உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொது போக்குவரத்துக்களிலும் அதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனும் கருத்து சமூகவலைத்தளங்களில் வலுத்து வருகிறது. அந்த கருத்துக்களின் பிரதியாக முன்னாள் பிரதமர் அத்தால் இதனை தெரிவித்துள்ளார்.
”"புர்கா அணியும் இளம் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், முக்காடு அணியும் இளம் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மற்றும் வெளிப்படையாகவும் அதிகரித்து வருவதன் மூலம் மத நடைமுறையை கடுமையாக்கப்படுகிறது" என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, “இது பாலின சமத்துவத்தையும், குழந்தை பாதுகாப்ப்பையும் கடுமையாக குறை மதிப்புக்கு உட்படுத்துகிறது! எனவே 15 வயதுக்கு கீழுள்ள சிறுமிகளை புர்கா உடையில் இருந்து விடுதை செய்யவேண்டும். அதற்கு தடை விதிக்கவேண்டும்” எனவும் சாடினார்.