Paristamil Navigation Paristamil advert login

கோவிட் 19 - முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தள்ளுபடி!! ஆச்சரியமில்லை!

கோவிட் 19 - முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தள்ளுபடி!! ஆச்சரியமில்லை!

21 வைகாசி 2025 புதன் 11:20 | பார்வைகள் : 559


2025 மே 21ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் தலைமை அரச சட்டமா அதிபர் ரெமி ஹைட்ஸ் ((Rémy Heitz)), கோவிட்-19 பேரிடருக்கான நிர்வாகக் காலத்தில் நடந்த செயல்களுக்காக  முன்னாள் அமைச்சர்களான எதுவார் பிலிப (Edouard Philippe), அன்யேஸ் புஸின் (Agnès Buzyn), மற்றும் ஒலிவியர் வேரான்  (Olivier Véran) மீது விசாரணை நடாத்த வழக்கு தொடர வேண்டாம் (non-lieu) என பரிந்துரை செய்துள்ளார்.

ஏன் இந்த முடிவு?

இந்த வழக்கு மக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்கும், பேரிடரை எதிர்கொள்வதில் தற்காலிகமாக தவறியதற்கும் தொடர்புடையது.

இந்த மூவரும் சாட்சி உதவியாளர் (témoin assisté) என்ற நிலைமையில் இருந்தனர்.

அரசு அந்த நேரத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், அவர்களிடம் குற்றம் நிரூபிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்யேஸ் புய்ஸின் விஷயத்தில்:

அவர் தனது அமைச்சுப் பொறுப்பை 2020 பிப்ரவரி 16 அன்று விட்டுவிட்டார். இது பிரான்சில் முதல் COVID மரணம் நடந்த பிப்ரவரி 25க்கும் முன். ஆரம்பத்தில் அவர் மீது முக்கிய குற்றச்சாட்டுகள் (mise en examen) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 2023ல் அது ரத்து செய்யப்பட்டது.

இவர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் சாத்தியம் மிகக் குறைவாக உள்ளது.

இறுதியாக, அரசுத் துறை அமைச்சர்களை விசாரிக்க ஒரே தகுதியுடைய CJR ( La Cour de justice de la République) நீதிமன்றக் குழு தான் இன்னும் இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது.

பின்னணி:

2020 மார்ச்சில் உள்ளிருப்பு விதிக்கப்பட்டபோது, பலர் முகக்கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய குறைவுகள் குறித்து அரசை விமர்சித்து வழக்குகள் தொடுத்தனர்.

ஜூலை 2020 இல் தொடங்கப்பட்ட நீதி விசாரணை, CJR  ஆல் நடத்தப்பட்டது, இது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் - பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுச் செயலாளர்கள் - தங்கள் செயல்பாடுகளைச் செய்யத் தவறும் போது செய்யப்படும் ஏற்படும் குற்றங்களுக்காக வழக்குத் தொடரவும் விசாரிக்கவும் அதிகாரம் பெற்ற ஒரே நீதிமன்றமாகும்.

பிரான்சில் மார்ச் 2020 இல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, பராமரிப்பாளர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, மற்றும் முகமூடிகளை அணிவதன் அவசியம் தேவையா, இல்லையா என்பது குறித்த பிழைகள், பின்னர் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் முக்கவசம் அவசியம் என தலைகீழான முடிவுகள் குறித்து, மருத்துவர்கள் மற்றும் பொது சங்கங்கள் கண்டனம் தெரிவித்த பல புகார்களிலிருந்து இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.

எனினும் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களைக் கூட தங்கள் நலனுக்காக அரசாங்கம் காப்பாற்றும். எதுவார் பிலிப்பின் ஆதரவு மக்ரோனிற்கு அவசியம். தன் போட்டியாளர்களை மட்டும் தான் மக்ரோன் அரசு தண்டிக்கும். இது ஆச்சரியமான ஒன்றல்ல.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்