Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் இருந்து வரும் பொதிகளுக்கு வரி..??!!

சீனாவில் இருந்து வரும் பொதிகளுக்கு வரி..??!!

21 வைகாசி 2025 புதன் 12:53 | பார்வைகள் : 3571


சீனாவில் இருந்து இணையமூடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது.

Shein, Temu போன்ற சீன நிறுவனங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது, €150 யூரோக்களுக்கு குறைவான விலையில் இருக்கும் ஒவ்வொரு பொதிக்கும் €2 யூரோக்கள் வரி அறவிடப்பட உள்ளது. இதனை ‘ஐரோப்பிய ஆணையம்’ நேற்று மே 20 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டில் €150 யூரோக்களுக்கு குறைந்த விலையுள்ள €800 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பா முழுவதும் €4.6 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சீன நிறுவனங்கள் எவ்வித வரியினையும் செலுத்தாமல் ஐரோப்பாவுக்குள் மிகப்பெரிய சந்தையினை பிடித்துக்கொண்டுள்ளதால், இந்த வரி அறவீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்