விஷால் – சாய் தன்ஷிகா காதல் மலர அந்த இயக்குனர்தான் காரணமா?

21 வைகாசி 2025 புதன் 15:16 | பார்வைகள் : 289
விஷால் மற்றும் தன்ஷிகா காதலிப்பதாக இருவருமே சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் அறிவித்தனர். மேலும், இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயமாகும்.
இந்த நிலையில், விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் ஒரு படம் கூட இணைந்து நடிக்காத நிலையில், எவ்வாறு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'விழித்திரு' என்ற திரைப்படத்தில் தன்ஷிகா நடித்திருந்தார். அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில், அவர் பேசும் போது, அந்த விழாவிற்கு வந்திருந்த டி. ராஜேந்தரை குறித்து பேசவில்லை. இதனைத் தொடர்ந்து, டி. ராஜேந்தர் ஆத்திரமடைந்து, “மேடையில் நாகரிகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா? என மேடையிலேயே தன்ஷிகாவை கடுமையாக திட்டினார்.
தன்ஷிகா அதற்காக மன்னிப்பு கேட்டபோதும், அவர் ஏற்கவில்லை. அதன் பிறகு, கண்ணீருடன் அந்த விழாவிலிருந்து தன்ஷிகா வெளியேறினார். அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஷால், தன்ஷிகாவுக்காக ஒரு ஆதரவு அறிக்கை வெளியிட்டார். மேலும், தன்ஷிகாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது தொடங்கிய அந்த நட்பே படிப்படியாக காதலாக மாறியது என கூறப்படும் ஒரு புதிய கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது, விஷால் மற்றும் தன்ஷிகா ஆகிய இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.