பாடசாலைகள் மாணவர்களின் தேவைகளுடன் ஒத்துப்போகவில்லை: நீதிமன்றம் விமர்சனம்!

21 வைகாசி 2025 புதன் 16:00 | பார்வைகள் : 1031
ஆரம்ப பாடசாலையின் கல்வி அமைப்பு, குழந்தைகளின் தேவைகளுடன் ஒத்துப்போகவில்லை எனக் கணக்காய்வு நீதிமன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வித் தரம் குறைந்து வரும் நிலையில், செலவுகள் அதிகரித்தும், வகுப்பறை சீர்திருத்தங்கள் செய்யப்பட்டும், மாணவர்களின் கல்வித் தரத்தில் முன்னேற்றம் இல்லை. வாரத்தில் நான்கு நாட்கள் பாடசாலையானது குழந்தைகளின் உடல் நலத்துக்கு தீங்கானது என்றும், வகுப்பில் மாணவர்களின் அளவை குறைப்பதும் நீடித்த பலன்கள் குறைவாகவே உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக கல்வி அமைப்பும், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி இல்லாமையும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன. பாடசாலை இயக்குநர்களுக்கான தெளிவான நிலை உருவாக்கப்பட வேண்டும், மற்றும் ஆசிரியர்களை மாவட்ட அடிப்படையில் நியமித்து, இடமாற்றத்தை எளிதாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், தொழிற்சங்கங்கள் சில பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பயிற்சி, வகுப்பளவு போன்ற அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன.
“பாடசாலைகள் நெருக்கடியில் உள்ளது, சமத்துவமின்மை அதிகரிக்கிறது” என FSU-Snuipp முதன்மை ஆரம்பக்கல்வி தொழிற்சங்கத்தின் செயலாளர் குய்ஸ்லைன் டேவிட் கூறியுள்ளார். ஆனால் “தரமான மாற்றத்துக்கு சிறந்த தீர்வுகள் தேவை”, அதற்காக ஆசிரியர் பயிற்சி மற்றும் வகுப்பறை அளவுகள் முக்கியமெனவும் தெரிவித்துள்ளார்.