Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல்.. ஒருவர் கைது!

பரிஸ் : பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல்.. ஒருவர் கைது!

21 வைகாசி 2025 புதன் 20:12 | பார்வைகள் : 1169


பெண் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட ஒருவரை பரிஸ் 15 ஆம் வட்டார காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமைக்கும் இன்று புதன்கிழமைக்கும் உட்பட்ட இரவில் இச்சம்பவம் Dupleix  நிலையம் அருகே, Boulevard de Grenelle பகுதியில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் மெற்றோ நிலையத்தை விட்டு வெளியேறியபோது, அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை தாக்கி, அவரது வாய்க்குள் காகிதம் ஒன்றை அடைத்து, அவரை மறைவான பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.பின்னர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

அதற்கிடையில் அப்பெண் சத்தம் எழுப்பியதால், பாதசாரிகள் பலர் விரைவாக செயற்பட்டு அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும், அவரை தாக்கிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்