RER மெட்ரோ சேவைகள் ஒழுங்காக உள்ளனவா?

22 வைகாசி 2025 வியாழன் 02:05 | பார்வைகள் : 202
2024ஆம் ஆண்டு மெட்ரோ, RER சேவைகளின் நிர்வாகிகளின் ளர்ச்சியைப் புகழ்ந்த வலெரி பெக்ரெஸ், மேலும் செயல்திறனை அதிகரிக்க வலியுறுத்தி உள்ளார்.
இல்-து-பிரான்ஸ் மோபிலித்தே (Île-de-France Mobilités) நிறுவனத்தின் தலைவரும், இல்-து-பிரான்சின் பிராந்தியத் தலைவருமான வலெரி பெக்ரெஸ், 2024ஆம் ஆண்டுக்கான பொதுப்போக்குவரத்து சேவை நிறுவனங்களின் செயல்திறனை மற்றுமொரு 'தர ஆலோசனை மூலம் மதிப்பீடு செய்துள்ளார்.
ஜோன் காஸ்தெக்ஸ் ( Jean Castex) (RATP), ஜோன்-பியர் பாராண்து (Jean-Pierre Farandou ) (SNCF) உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் தங்கள் மூன்று நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் சேவைகளில் முன்னேற்றங்களை விளக்கினர்.
சிறந்த முன்னேற்றங்களாக
8 மெட்ரோ வழித்தடங்களிலும், 7 தொடருந்து வழித்தடங்களும் (RER 10 Transilien) குறிப்பிட்ட இலக்கை மீறிய செயல்திறனைக் காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய முன்னேற்றமமாக
மெட்ரோக்கள் மக்கள் அதிகமாகச் செல்லும் வேலை நேரத்தில் 96 சதவீதம் குறிப்பிட்ட நேரத்தைக் கடைபிடித்துள்ளன
87சதவீத பயணிகள் RATP சேவையில் திருப்தியாக இருப்பதாக பதிலளித்துள்ளனர் (பதிலளித்தோர்: 157,000 பேர்).
எனவும் தங்ளைத் தாங்களே வெறும் புள்ளி விபரங்கள் மூலம் புகழ்ந்துள்ளனர்.
சிக்கல்கள் உள்ள வழித்தடங்களாக, வலெரி பெக்ரெஸ் கவலை தெரிவித்த வழிகள்
மெட்ரோ 6, 8 மற்றும் 13 இல் செயல்திறன் குறைவாக உள்ளது.
மெட்ரோ 9 இல் தாமதம் அதிகமாக உள்ளது.
மாற்றீடாக
MF19 வகை புதிய மெட்ரோக்கள் 2027ல் வருகிறன, மெட்ரோ 8 இற்கு புதுப்பிக்கப்பட்ட மெட்ரோ தொடருந்துகள் வந்துவிட்டன மேலும் 2030ல் முழுமையாக புதிய தொடருந்துகள் வந்துவிடும்.
மெட்ரோவில் மட்டும் 10 பில்லியன் யூரோவை விட அதிக முதலீடு செய்து வருகிறது SNCF.
புதிய நடைமுறை
சுகவீனமுற்ற பயணிகளிற்கான புதுவித ஏற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களைப் பராமரிப்பதற்கு பலமணி நேரங்கள் மெட்ரோ மற்றும் சுநுசு சேவைகள் தடைப்படுகின்றன.
கடந்த மாதங்களிலிருந்து மெட்ரோ, RER இடைநிறுத்தம் இல்லாமல் முகாமையாளர் குழுவால் நேரில், நடை மேடையில் (platform) வைத்துப் பாதிக்கப்பட்ட பயணிகள் சிகிச்சை மற்றும் பராமரிப்புச் செய்யப்படுகின்றனர்.
இது முழு வழித்தடங்களிலும் தாமதத்தைக் குறைக்கும் முயற்சியாகும்.
மாற்றம் தேவை!
ஆனால், தொடருந்துகளில் உள்ள தூய்மையின்னை, தகவல் பரிமாற்றம் மோசம், மின்படிகட்டுகளான எஸ்கலேட்டர்கள் பழுது பார்கப்படுதில் பெரும் தாமதம் என பல் வேறு விடயங்களில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
வலெரி பெக்ரெஸ் இதுபற்றி விரைவான முன்னேற்றங்கள் தேவை என SNCFக்கு வலியுறுத்தியுள்ளார்.
2024ல் நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும், சில முக்கியமான சவால்கள் தொடருகின்றன.
2025 இற்கான நோக்கமாக அதிக செயல்திறன், புதிய தொடருந்துகள், சுத்தம் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் மேம்பாடு போன்றவை தேவையென அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என வலெரி பெக்ரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆனாலும் பயணிகள் அன்றாடம் தொடருந்துத் தாமதங்களால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டே வருகின்றனர்.