Gare de l'Est : தொடருந்து மீது ஏறிய நபர்.. மின்சாரம் தாக்கி படுகாயம்!

22 வைகாசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 956
நபர் ஒருவர் தொடருந்து ஒன்றின் மீது ஏறியதை அடுத்து, மின்சாரத்தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
நேற்று மே 21, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் இச்சம்பவம் Gare de l'Est தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள ஆறாம் இலக்க நடைமேடையில் காத்திருந்த ஒருவர், அதிவேக தொடருந்து ஒன்றின் மேல் ஏறியுள்ளார். தொடருந்தின் மேல் இருந்த மின்சாரக்கம்பி மூலம் மின்சாரம் தாக்கப்பட்டு அவர் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் மீட்கப்பட்டார். அவர் Georges Pompidou மருத்துவமனைக்கு உயிராபத்தான நிலையில் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜேமனியின் Frankfurt நகர் நோக்கி பயணிக்க தயாராக இருந்த தொடருந்தின் மீதே குறித்த நபர் ஏறியுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோதமாக தொடருந்தில் ஏறி ஜேமனிக்குச் செல்ல முற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.