Paristamil Navigation Paristamil advert login

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்க துரித நடவடிக்கை

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்க துரித நடவடிக்கை

22 வைகாசி 2025 வியாழன் 09:54 | பார்வைகள் : 3797


யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை மாவட்ட செயலர் வலியுறுத்தினார்.

ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.

அதன் போது, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்