கிரீஸில் திடீர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

22 வைகாசி 2025 வியாழன் 11:57 | பார்வைகள் : 253
கிரீஸில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
104 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் , 35.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 25.79 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கிரீஸில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் சிதறி விழுந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.