டெலிகிராம் செயலியூடாக ஆபாசப்படம் பகிர்ந்த - 55 பேர் கைது!!

22 வைகாசி 2025 வியாழன் 13:37 | பார்வைகள் : 645
டெலிகிராம் செயலி ஊடாக ஆபாசப்படங்களை பகிர்ந்துகொண்ட 55 பேரினை பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வார திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பிரெஞ்சு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 42 மாவட்டங்களில் மொத்தமாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ள சிறுவர் பாலியல் ஆபாசப்படங்களை அவர்கள் டெலிகிராம் செயலி ஊடாக பகிர்ந்துகொண்டுள்ளனர். அச்செயலியில் உள்ள ”encrypted " எனும் வசதியை பயன்படுத்தி ரகசியமாக இதனை நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்ததாகவும், கடந்த வருட கோடை காலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு,. தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிரியார், வயதான தாத்தா ஒருவர், ஒரு மருத்துவ உதவியாளர், இசை ஆசிரியர், திருமணமாகாதவர்கள் என 25 தொடக்கம் 75 வயது வரையுள்ள 55 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் OFMIN தெரிவித்துள்ளது.