Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

 இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

22 வைகாசி 2025 வியாழன் 13:57 | பார்வைகள் : 265


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

“போர் முடிவடைந்த பிறகு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்குரிய யோசனையை நாம் முன்வைத்தோம். வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்குரிய செயலணி யோசனையும் முன்வைக்கப்பட்டது. அவை அமுலுக்கு வரவில்லை.

அரசியல் ரீதியில் தற்போது வங்குரோத்தடைந்துள்ள தரப்பினரே தமக்கு புத்துயிர் அளித்துக்கொள்வதற்கு போரை பயன்படுத்த முற்படுகின்றனர். தற்போது சமாதானம் என்பதே முக்கியம். அதனை செய்வதற்கு நாம் முன்வரவேண்டும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனைக்கூட எம்மால் முன்வைக்கப்பட்டதுதான். போர் முடிந்த பிறகு செய்யப்பட வேண்டிய விடயங்கள் முன்னெடுக்கப்படாததால்தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று உள்ளது.

தேசிய பொறிமுறை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியளித்துள்ளோம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இனவாதம் பேசினால் அது நல்லிணக்க முயற்சிக்கு தடையாக அமையும்.

மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் ஜுன் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார். இலங்கைக்கு வந்து பிரதேசங்கள் மற்றும் நிறுவனங்களை கண்காணிப்பார். அதன் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த சவாலுக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலையிட்டாலும், தலையிடாவிட்டாலும்கூட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு எமக்கு உள்ளது.”- என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்