யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்களின் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்: உள்துறை அமைச்சரின் உத்தரவு!

22 வைகாசி 2025 வியாழன் 14:00 | பார்வைகள் : 522
உள்துறை அமைச்சர் ப்ருனோ ரெத்தையோ (Bruno Retailleau), புதன்கிழமை மாலை அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, பிரான்சில் யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வழிபாட்டு தளங்கள், பாடசாலைகள், கடைகள், ஊடகங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் போன்ற இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மக்களுக்கு தெரியும் வகையிலும் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜான்-நொயெல் பாரோ ஆகியோரும் தாக்குதலைக் கண்டித்து, "இது யூத விரோத தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இவ்வகை வன்முறைக்கு எந்த காரணமும் சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.