வீட்டில் தயாரித்த வெடிகுண்டுடன் பாடசாலைக்கு வருகை தந்த இரு சிறுவர்கள் கைது!

22 வைகாசி 2025 வியாழன் 14:37 | பார்வைகள் : 901
வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான வெடிபொருளுடன் பாடசாலைக்கு வருகை தந்த ஒரு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கண்ணாடி போத்தலில் பெற்றோல் நிரப்பப்பட்டு திரி வைக்கப்பட்ட ஒரு ‘எறிகுண்டு’ வெடிபொருட்களை அவர்கள் வீட்டில் வைத்து தயாரித்து, அதனை பாடசாலை பைகளுக்குள் மறைத்து எடுத்து வந்ததாகவும், பின்னர் பாடசாலையில் வைத்து அதனை எரித்து வெடிக்க வைக்க முயன்றும் உள்ளனர்.
அதற்கிடையில் காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிபொருட்களும் ஆபத்தின்றி அகற்றப்பட்டது.
கல்விச் செயற்பாடுகள் முற்பகல் 11 மணி வரை தடைப்பட்டது.
இச்சம்பவம் நேற்று மே 21, புதன்கிழமை காலை Le Havre நகரில் உள்ள உயர்கல்வி பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.