€4 பில்லியன் யூரோக்கள் வரி செலுத்திய LVMH !!

22 வைகாசி 2025 வியாழன் 15:37 | பார்வைகள் : 566
Louis Vuitton நிறுவனத்தின் தாய் நிறுவனமான LVMH, கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரான்சுக்கு €4 பில்லியன் யூரோக்கள் வரி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பணக்காரர்களில் முதலிடத்திலும், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள Bernard
Arnault, நேற்று பிரெஞ்சு செனட் சபையினரால் விசாரிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 6 மணிக்கு அவர் செனட் சபையினர் முன்பாக தோன்று, அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்போது சில முக்கிய விடயங்களை அவர் செனட் உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் 3.5 பில்லியன் யூரோக்கள் முதலிட்டுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, எந்த வித சலுகைகளையும் எதிர்பாராமல் நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளுக்காக €200 மில்லியன் யூரோக்கள் வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிக முக்கியமாக சென்ற 2023 ஆம் ஆண்டில் €4 பில்லியன் யூரோக்கள் வரி செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகளவில் வரிச்சுமையை விதித்துள்ள பிரான்ஸ், எங்களது நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படும் போலியான பொருட்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.