சீன முதலீடுகள் வரவேற்பு ஆனால் சமமான போட்டி அவசியம்: இம்மானுவேல் மக்ரோன்!

22 வைகாசி 2025 வியாழன் 15:50 | பார்வைகள் : 407
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் (Xi Jinping) இன்று தொலைபேசியில் உரையாடிய பின்னர், இரு நாடுகளும் வலுவான பொருளாதார உறவை கட்டியெழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சீன முதலீடுகள் பிரான்ஸில் வரவேற்கப்படுகின்றன என்றும், ஆனால் பிரஞ்சு நிறுவனங்களுக்கும் சீன நிறுவனங்களுக்கும் சம போட்டி நிலைமைகள் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். கொனியாக் (cognac) மீள்ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் விரைவில் தீர்வுக்கு வர ஒப்பந்தம் நடந்ததையும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி சி ஜின்பிங், சர்வதேச வர்த்தக விதிகள் மற்றும் உலக பொருளாதார ஒழுங்கை பாதுகாக்க சீனாவும் பிரான்ஸும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், சீனாவும் ஐரோப்பாவும் ஒருமித்து உலக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும், வான்வெளி, அணு சக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், பசுமை வளர்ச்சி, மருத்துவம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.