ஹீரோ அவதாரம் எடுக்கும் தயாரிப்பாளர்

22 வைகாசி 2025 வியாழன் 16:42 | பார்வைகள் : 139
நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்த தயாரிப்பாளர், ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா நடித்த 'அறம்' மற்றும் 'ஐரா' படங்களையும், சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களையும் தயாரித்தவர் 'கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் ஆவார். மேலும், அவர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட சில படங்களின் விநியோக உரிமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஜேஷ் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜேஷ் நடிக்கும் முதல் படத்தில் அவர் ஒரு விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்பது வீடியோ காட்சிகளிலிருந்து தெரிய வருகிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிரன் என்ற கேரக்டரில் அவர் நடிக்க இருக்கும் படத்தை ஸ்வஸ்திக் விஷன் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இது இந்நிறுவனத்தின் முதல் படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.