வருமான வரி அறிவிப்பு (2024) நிரப்ப உதவிகள்தேவையா?

22 வைகாசி 2025 வியாழன் 16:35 | பார்வைகள் : 855
உங்கள் 2024 வருமானத்திற்கான வரியை பதிவு செய்யம் இறுதிக் காலம் நெருங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் உங்கள் வருமான வரி அறிவிப்பை நிரப்ப இயலாத நிலைமையா? அஞ்ச வேண்டாம் உதவிகள் தயாராக உள்ளன.
பின்வரும் செலவுகளை எங்கே பதிவு செய்வதென்ற குழப்பம் அதிகரித்துள்ளதா?
தொழில்நிறுவனத்திற்குச் செல்லலும் கிலோமீற்றரிற்கான செலவுகள்
வீட்டில் குழந்தை பராமரிப்பு செலவுகள்
வீட்டு வாடகை வருமானம்
என்பவற்றிற்கான மற்றும் ஏனைய குழப்பங்களிற்கும் வருமானவரி அலுவலத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ளும் முறைகள்
தொலைபேசி மூலம்
உங்கள் வரிவிபரச் சீட்டில் (avis d’imposition) உள்ள வரித்துறை எண்ணை அழைக்கலாம்
அல்லது இலவச பொதுத்தொலைபேசி எண்: 0 809 401 401 இனை அழைக்கலாம்
வேலை நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 - மாலை 19h00 மணிவரை (உங்கள் பகுதி வேலை நேரத்தினை சரி பார்க்கவும்)
பாதுகாப்பான தகவல் (Messagerie sécurisée) இனை பின்வரும் இணையத்தளத்தில் அனுப்பிக் கொள்ளலாம்.
இணையதள முகவரி: https://www.impots.gouv.fr
உங்கள் Particulier கணக்கில் நுழைந்து →→ « Messagerie sécurisée » இனைத் தொடரவும்
இதையும் தாண்டி
ஒரு வருமானவரி அலுவலரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்
வருமானவரி அலுவலருடன் சந்திப்பிற்கான முன்பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
வருமானவரிப் பதிவில் உள்ள அனைத்துச் சிக்கல்களையும் இந்தச் சந்திப்பின் போது நிவர்த்தி செய்யலாம்.
தொலைபேசி மூலம்
காணொளி அழைப்பின் மூலம்
நேரில் பணிமனைனயில் சந்திப்பு
ஆகிய வழிகளில் வருமானவரி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்
இணையத் தளம் மூலம் சந்திப்பை ஏற்படுத்த முடியும்
»impots.gouv.fr → « Contacts et RDV » → « Prendre rendez-vous »
தேவையான விவரங்கள்: பெயர், வருமானவரி எண், தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை இதற்குத் தேவைப்படும்.
ஒரு வருமானவரி இணைத்தளத்திலுள்ள வரைபடம் மூலம் உள்கள் அருகிலுள்ள வருமானவரி சேவை மையங்களை அறிந்து கொள்ளலாம்.
France Services மையங்களில் வருமானவரி அதிகாரிகள் உங்கள் கோப்புகளை அணுகி உதவ முடியும்
இவை வருமானவரி மையங்களில், நகரசபைகளில், அல்லது காணொளி அழைப்பில் இந்த உதவிகள் கிடைக்கும்
இலவச வருமானவரி சேவை (சம்பந்தப்பட்ட கணக்காய்வாளர்களுடன்)
இலவச எண்: 0 800 06 54 32
நேரம்: காலை 9 மணி – மாலை 18 மணி
சேவை நாட்கள்:
மே 21, 22
மே 26, 27
ஜூன் 4, 5
மே 22, 27 மற்றும் ஜூன் 5 – இரவு 21 மணி வரை நீட்டிக்கப்பட்ட நேரமாக பெரும்பாலான வருமானவரி மையங்கள் இயங்கும்.
இந்த சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.சரியான முறையில் வருமானவரி பதிவை நிரப்புவதற்கான உதவிக்கும், தவறாக பதிவு செய்து பிரச்சனைகளிற்கு
உள்ளாகாமல் இருக்கவும் இந்த சேவைகளைப் பயன்படுத்துங்கள்!