Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க குடியிருப்பு மீது மோதிய விமானம் - தீ பற்றி எரியும் 15 வீடுகள்

அமெரிக்க குடியிருப்பு மீது மோதிய விமானம் - தீ பற்றி எரியும் 15 வீடுகள்

22 வைகாசி 2025 வியாழன் 18:49 | பார்வைகள் : 172


அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டிகோ(San Diego) நகரில், Cessna 550 என்ற சிறிய விமானம் குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணியளவில், மாண்ட்கோமெரி நிர்வாக விமான நிலையத்திற்கு அருகில் நடந்த இந்த விபத்தில் விமானம் நேரடியாக ஏராளமான வீடுகளின் மீது மோதியுள்ளது.
 
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 15க்கும் மேற்பட்ட வீடுகள் தீ பற்றி எறிந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் அங்குள்ள 3 தெருக்களில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

6 முதல் 8 பேர் பயணிக்கும் வகையிலான இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அதில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த பகுதி முழுவதும் விமான எரிபொருள் உள்ளதாக உதவி தீயணைப்புத் தலைவர் டான் எடி தெரிவித்துள்ளார்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்