Paristamil Navigation Paristamil advert login

ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம்

ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம்

23 வைகாசி 2025 வெள்ளி 06:45 | பார்வைகள் : 123


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தேவைப்படுகிறது. அது தொடர வேண்டும், என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

கோவா கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாரதம் மாறிவிட்டது. தற்போது நம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கதாக உள்ளது. நமக்கு தொல்லை கொடுக்கும் அண்டை நாட்டிற்கு மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், பயங்கரவாதம் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்படும் போது அவர்கள் வேட்டையாடப்படுவார்கள். ஆபரேஷன் சிந்தூர் தேவைப்படுகிறது. அது தொடர வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூரின் போது, துல்லியமாக தாக்குதல் நடத்திய நமது ஆயுதப்படையினரின் திறமையை பார்த்த சர்வதேச சமுதாயம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாகிஸ்தானில் சடலங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், யாரும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து யாரும் ஆதாரம் கேட்கவில்லை. இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்