Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்கள் மீதான பாலியல் குற்றவாளிகள் சுற்றிவளைப்பு!!

சிறுவர்கள் மீதான பாலியல் குற்றவாளிகள் சுற்றிவளைப்பு!!

22 வைகாசி 2025 வியாழன் 21:21 | பார்வைகள் : 733


பிரான்ஸ் முழுவதும் நடந்த பாரிய சுற்றிவளைப்பில் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றம் புரிந்தோர் (PÉDOCRIMINALITÉ)  அல்லது புரிய முற்பட்டோர் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு செயலியில் தண்டனைக்குரிய படங்கள் காணொளிகள் பகிர்ந்தமை தொடர்பாக இந்த நடவடிக்கை நடந்துள்ளது.

சிறார்களுக்கான பாதுகாப்பு அலுவலகத்தின் செயல்பாட்டுப் பிரிவின் ஆணையாளர் குவாந்தன் பெவான் (Quentin Bévan) இந்த விசாரணைப்பிரிவின் முக்கியமானவராக இருந்துள்ளார்.

சிற்றார்களிற்கான அலுவலகமான Ofmin (l'Office des mineurs) உடன் இணந்து காவற்துறையினர் இந்த நீண்ட 10 மாத விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

டெலிகிராம் குழுக்களில் குற்றவாளிகள் எப்படி கைது செய்யப்பட்டனர்?

கடந்த கோடையில் கைது செய்யப்பட்ட அதிக ஆபத்துள்ள ஒரு மோசமான சிறார் பாலியல் குற்றவாளியின் ஊடாக விசாரணை தொடங்கப்பட்டது.

அவன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்து, பாலியல் குற்றவாளிகள் பரிமாறிக் கொண்ட Telegram குழுக்களில் காவற்துறையினர் முறையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊடுருவியுள்ளனர்.

அந்த குழுக்களில் நடப்பதை நாங்கள் நேரடியாக பார்த்தோம் ஆனாலும் விசாhரணை முறைகளை அதன் இரகசியத் தன்மை கருதி வெளிப்படுத்த முடியாது என ஆணையாளர் குவென்டின் பேவன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுக்கள் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை காணொளிகளைப் பகிர்ந்தன.
இந்த 55 பேரும் அனைவரும் அந்த படங்களைப் பார்த்தது மட்டுமல்லாமல், அதனைப் பரிமாறியவர்களாகவும் இருந்துள்ளனர். சிலர் குற்றவாளியை ஊக்குவித்திருந்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வயது சில மாதங்கள் முதல் 10 முதல் 12 வயது வரை மட்டுமே என்பது அதிர்ச்சிக்கு உரிய  விடயமாகவே இருந்தது.

காவற்துறையினர் பிள்ளைகள் அருகில் பணியாற்றுபவர்கள் அல்லது குடும்ப உறவுகளில் இருப்பவர்களை முக்கியமாக குறிவைத்தனர்.

இது போன்ற விசாரணைகள் மூலம் முன்பே கவனிக்கப்படத் தவறிய நபர்களையும் கண்காணிக்கப்பட முடிந்ததாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில்

ஒரு பாதிரி,
ஒரு இசைப் பட்டறை ஆசிரியர்,
ஒரு அவசரசிகிச்சை (Ambulance) ஊழியர் 
ஆகியோர் இதில் அடங்கியிருந்தனர் என்பது அச்சத்தை ஊட்டி உள்ளது.

இந்த தகவல் பரிமாற்றச் செயலிகள் இந்த வகை குற்றங்களுக்கு மிகவும் உகந்த செயலியாகி விட்டது. அவர்கள் வேகமாக, எங்களிற்கு பதிலளிக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில், பல நாட்கள் ஆகிறது பதிலுக்காக காத்திருக்க என பேவன் தெரிவித்துள்ளார்.

தீய நோக்கத்தில் செயல்படும் இந்த இருட்டு வலைத்தளங்களும் செயலிகளும் குறித்து விழிப்புடன் இருங்கள்.

உங்கள் சமூகத்தில் சந்தேகமுடைய ஆட்களைப் பார்த்தால் அதிகாரிகளிடம் உடனடியாக புகாரளிக்கவும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிகவும் விழிப்புடன் இருங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்