Paristamil Navigation Paristamil advert login

‘தக் லைஃப்’ படத்தில் ஸ்ருதிஹாசன்?

‘தக் லைஃப்’ படத்தில் ஸ்ருதிஹாசன்?

23 வைகாசி 2025 வெள்ளி 12:14 | பார்வைகள் : 247


கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படம் கமல்ஹாசனின் 234 வது படமாகும். இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

அதே சமயம் நடிகர் சிம்பு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கிய காரணம். மேலும் திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார் ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

படத்திலிருந்து டீசர், ட்ரைலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இது தவிர ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நாளை (மே 24) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் விண்வெளி நாயகன் பாடலை கமல்ஹாசனின், மகளும் பிரபல நடிகையுமான சுருதிஹாசன் பாடியுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்