202 ஓட்டங்கள் வரை வந்து தோல்வி ஏன்? கில் விளக்கம்

23 வைகாசி 2025 வெள்ளி 14:50 | பார்வைகள் : 336
குஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவர் சுப்மன் கில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறித்து கருத்து தெரிவித்தார்.
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியில் ஷாருக் கான் 57 (29) ஓட்டங்களும், ரூதர்போர்டு 38 (22) ஓட்டங்களும் விளாசினர்.
போட்டிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் சுப்மன் கில் (Shubman Gill), "நாங்கள் 15-20 ஓட்டங்களை கூடுதலாக விட்டுக்கொடுத்தோம்.
அவர்களை 210 ஓட்டங்களுக்குள் நிறுத்த விரும்பினோம். 210க்கும் 230க்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது.
பவர்பிளேயில் நாங்கள் நன்றாக பந்துவீசினோம். எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. ஆனால், பவர்பிளேவிற்கு பிறகு 14 ஓவர்களில் அவர்கள் 180 என நிறைய ஓட்டங்கள் எடுத்தனர். 17வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் சரியாக இருந்தோம், 240 ஓட்டங்களைத் துரத்துவது ஒருபோதும் எளிதாக இருக்கவில்லை.
ரூதர்போர்டு மற்றும் ஷாரூக்கின் துடுப்பாட்டம் ஒரு பெரிய சாதகம். இதுபோன்று நிறைய சாதகங்கள். மீண்டும் கொஞ்சம் வேகம் பெறுவது முக்கியமாக இருக்கும், பிளேஆப்களுக்குள் வெற்றிப் பாதைக்குத் திரும்ப விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.