வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு

24 வைகாசி 2025 சனி 14:36 | பார்வைகள் : 1878
வட கிழக்கு மாநிலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது'' என தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வடகிழக்கு மாநிலங்களில் 350 பயோகேஸ் ஆலைகளை அமைப்பதில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யும். இதனால் 25 லட்சத்திற்கு அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த 40 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இந்தப் பகுதியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது.
மருத்துவமனை
அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்கள் முதலீடுகளை இரட்டிப்பாக்குவோம். அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செயற்கை நுண்ணறிவின் புரட்சிகர சக்தியைக் கொண்டு செல்வதே ஜியோவின் முன்னுரிமையாக இருக்கும். மணிப்பூரில் 150 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.50,000 கோடி முதலீடு
முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழிலதிபர் கவுதம் அதானி பேசியதாவது: அதானி குழுமம் அடுத்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதலாக ரூ.50,000 கோடி முதலீடு செய்யும். இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வடகிழக்கு மாநில மக்களுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1