Paristamil Navigation Paristamil advert login

பயணச்சிட்டை இன்றி பயணம்.. குற்றப்பணம் அதிகரிப்பு!!

பயணச்சிட்டை இன்றி பயணம்.. குற்றப்பணம் அதிகரிப்பு!!

23 வைகாசி 2025 வெள்ளி 19:17 | பார்வைகள் : 1039


பயணச்சிட்டை இன்றி பயணிப்போருக்கு விதிக்கப்படும் குற்றப்பணம் அதிகரிக்கப்பட உள்ளது.

தற்போது €50 யூரோக்களாக உள்ள கட்டணம், வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் €70 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. பொது பயணங்களின் போது இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் RATP பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு நடவடிக்கையே இந்த குற்றப்பணத்தை அதிகரிப்பதாககும்.

"பொது போக்குவரத்து மோசடிகளுக்கு எதிரான மிக குறைவான குற்றப்பணம் அறவிடும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது!" என RATP நிறுவனத்தின் மேலாளர் Jean Castex தெரிவித்தார்.

இல்-து-பிரான்சுக்குள் ஆண்டுக்கு €700 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்