Paristamil Navigation Paristamil advert login

சிறுவர் பாலியல் குற்றவாளி மதகுரு தற்கொலை முயற்சி!!

சிறுவர் பாலியல் குற்றவாளி மதகுரு தற்கொலை முயற்சி!!

23 வைகாசி 2025 வெள்ளி 22:19 | பார்வைகள் : 5119


டெலிகிராம் செயலியின் வழியாக செயல்பட்ட ஒரு பெரிய பாலியல் குற்றவாளிகள் வலையமைப்பின் கைது  நடவடிக்கையின்போது, பிரான்ஸில் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெலிகிராம் வழியாக செயல்பட்ட பாலியல் குற்றவாளிகள் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரான ரபயேல் S. தற்கொலை செய்ய முயன்று ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து சாளரம் வழியாகக் குதித்துள்ளார்.

இவர் அல்சாஸ் பகுதியைச் சேர்ந்த கல்லிகன் திருச்சபையின ஒரு மதகுரு ஆவார்.

இன்னமும் இவர் உயிராபத்தான நிலையிலேயே உள்ளார். வைத்திய சிகிச்சையின் தீவிரத்தால் இவர் ஆழ்நிலை மயக்கமான கோமா நிலைக்குச் சென்றுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவரும் 55 சந்தேகபடுத்தப்பட்டவர்களில் ஒருவராக, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 2019 மார்ச் மாதம் முதல் 2025 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் குழந்தைகளுக்கான பாசறைச் செயல்நிகழ்வில் எடுத்த படங்களை வைத்திருந்ததும், அதை டெலிகிராம் வழியாக பரப்பியதற்காகதாகவும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கத்தோலிக்கமோ அல்லது வேறு பிரிவுகளில் சேராத கல்லிகன் திருச்சபையில் உள்ள இவர் திருமணமானவர் என்றும், குற்றங்களை தானாகவே ஏற்றுக்கொள்கிறார் என்றும், மருத்துவ உதவியுடன் இதற்கான தீர்வு காணவும் முயற்சி செய்தார் என்றும், இதற்காக ஒரு மனோவியல் சிகிச்சை பெற முயற்சித்தார் என்றும், இவரது வழக்குரைஞர் மே. மிக்கேல் வாக்கேஸ் கூறியுள்ளார்.

நடிகர்களான பிரிஜிட் பார்தோ மற்றும் அலேன் தெலோனுடன் இந்த மத குரு நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்