Paristamil Navigation Paristamil advert login

நியூயோர்க்-பரிஸ் விமானத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 57 வயதுப் பெண் கைது!

நியூயோர்க்-பரிஸ் விமானத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 57 வயதுப் பெண் கைது!

23 வைகாசி 2025 வெள்ளி 22:26 | பார்வைகள் : 3164


57 வயதான ரஷ்ய பெண் ஸ்வெட்லானா டலி (Svetlana Dali), டிக்கெட் மற்றும் போர்டிங் பாஸ் இல்லாமல் நியூயோர்க்-பரிஸ் விமானத்தில் பயணம் செய்ததற்காக கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டார் என அமெரிக்கா பத்திரிகை ஒன்று மே 22ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த நவம்பரில், "Air Europa" நிறுவன ஊழியராக நடித்து, பாதுகாப்பை ஏமாற்றி விமான நிலையத்திற்குள் சென்ற அவர், பின்னர் Delta Airlines ஊழியர்களையும் ஏமாற்றி விமானத்தில் ஏறியுள்ளார். பல மணிநேரம் கழிப்பறையில் மறைந்து இருந்தவள், பரிஸ் அருகே வந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார். அங்கிருந்து கைது செய்யப்பட்டு மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

FBI விசாரணையின் போது, அவள் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தப்பிச் சென்றதாக கூறியுள்ளார். தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்ட போதும், மின்கழுத்துப்பட்டியை அகற்றி கனடா எல்லையை கடக்க முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே Miami மற்றும் Floride விமான நிலையங்களில் பாதுகாப்பை ஏமாற்றிய நிகழ்வுகளும் பின்னர் தெரியவந்துள்ளன. தற்போது, அவளுக்கு நீண்டகால சிறைத்தண்டனை எதிர்பார்க்கப்படுகின்றது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்