இரு படகுகளில் 83 அகதிகள் ஆபத்தான பயணம்... நடுக்கடலில் இருந்து மீட்பு!!

24 வைகாசி 2025 சனி 08:26 | பார்வைகள் : 559
கலே பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி 83 அகதிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்கள் அனைவரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
மே 20 செவ்வாய்க்கிழமை இரவு இரு அகதிகள் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். இச்சம்பவம் இடம்பெற்ற இரண்டாவது நாள் 22 ஆம் திகதி இரவு இந்த கடற்பயணம் இடம்பெற்றது. அன்றைய இரவில் மொத்தமாக 800 இற்கும் மேற்பட்ட அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்ததாகவும், அதில் 83 அகதிகள் உயிருக்கு போராடிக்கொண்டு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகவும், அவர்களை கடற்படையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
முதலாவது படகில் 18 அகதிகளும், இரண்டாவது படகில் 65 அகதிகளும் பயணித்த நிலையில், இரு படகுகளும் இயந்திரக்கோளாறினால் செயலிழந்து கடலில் தத்தளித்ததாகவும், அதன் பின்னரே அவர்கள் மீட்கப்பட்டதகவும் தெரிவிக்கப்படுகிறது.