35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் ரேவதி?

24 வைகாசி 2025 சனி 12:19 | பார்வைகள் : 224
தளபதி விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் படத்தில் ரேவதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிதாக நடிகை ரேவதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1990ஆம் ஆண்டு, விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தில், விஜய்யின் சகோதரியாக ரேவதி நடித்திருந்தார். தற்போது, 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அவர் விஜய்யின் அம்மா வேடத்தில் நடிக்கிறார் என்பது தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படக்குழுவினர் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.