20 ஆண்டுகளுக்கு தொடரும் போர் - முன்னாள் பிரித்தானிய அரசு அதிகாரி எச்சரிக்கை

24 வைகாசி 2025 சனி 18:56 | பார்வைகள் : 1340
உலக நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தொடரும் என முன்னாள் பிரித்தானிய அரசு அதிகாரி கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் சைமன் கேஸ் (Simon Case), உலகம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, நாடுகளுக்கிடையேயான போர்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பரில் தன் பதவியில் இருந்து விலகிய கேஸ், The Times நாளிதழுக்கு அளித்த முதல் முக்கியமான நேர்காணலில், பிரித்தானியாவின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்று கூறியுள்ளார்.
பணிநிலையை தொடரும் டிரைடன்ட் அணுகுண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மாற்றாக, நிலத்தில் அல்லது ஜெட் விமானதில் இருந்து ஏவக்கூடிய அணுகுண்டு பாதுகாப்பு அமைப்புகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“எந்த ஒரு அமைப்பையும் தனியாக நம்புவது சரியானது அல்ல, அதுவும் அணு ஆயுத சமயத்தில்,” என அவர் கூறினார்.
சைமன் கேஸ் மேலும், மேற்கத்திய கூட்டமைப்புகள் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக விரைவில் தயாராக வேண்டும் என்றும், பிரித்தானியா தனது பாதுகாப்பு செலவுகளை உடனடியாக 3 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, பாதுகாப்பு செலவுகளை 2027-க்குள் 2.5 சதவீதமாக உயர்த்துவதாகவும், அடுத்து வரும் நாடாளுமன்ற காலத்தில் அதை 3 சதவீதமாக உயர்த்துவதாக உறுதி தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1