Paristamil Navigation Paristamil advert login

ஹமாசை முற்றாக அழித்தல் - இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலிருந்து சில பாடங்கள் - ஜெருசலேம் போஸ்ட்

ஹமாசை முற்றாக அழித்தல் - இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலிருந்து சில பாடங்கள் - ஜெருசலேம் போஸ்ட்

24 வைகாசி 2025 சனி 19:56 | பார்வைகள் : 116


பிரிட்டன்,பிரான்ஸ், கனடா போன்றவற்றின்  கடும் கண்டனங்களிற்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது புதிய சர்ச்சைக்குரிய தாக்குதலிற்கு தயாராகிவரும்; வேளையில்,இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும்,பாதுகாப்பு ஆய்வாளருமான கேர்ணல் கலாநிதி மோசே எலாட் ஹமாசினை ஒழிப்பதற்கு இலங்கை இறுதி யுத்தத்தில் கையாண்ட வழிமுறைகளை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹமாசை ஒழிப்பதற்கும் காசாவில் அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பெரும் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் தெற்கு லெபனான் மண்டலத்தில் உள்ள டைர் மற்றும் பின்ட் பெய்ல் மாவட்டங்களின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான நிபுணருமான மொசே எலாட் பயங்கரவாத அமைப்புகளை வெற்றிகரமாக அழிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மாரிவ் உடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை அழிப்பது உண்மையிலேயே சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச அனுபவங்களை பயன்படுத்தியுள்ள அவர்,மேற்குலக நாடுகள் விவாதிக்க தயாராகயிருக்கும் ஒரு விடயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை முற்றாக செயல் இழக்க செய்ய முடியுமா?முழுமையான வெற்றி சாத்தியமா என்ற சர்வதேச விவாதம் ஹமாஸ் ஹெஸ்புல்லா பாலஸ்தீன ஜிகாத் போன்றவற்றின் சூழமைவில் பெருமளவிற்கு தீர்வுகாணப்பட்டதாக காணப்படுகின்றது.

காசா மக்களை பட்டினிபோடுதல் ,தென்லெபனான் கிராமங்களை அழித்தல்,இஸ்ரேலின் ஒவ்வொரு தடையையும் மனிதாபிமான நெருக்கடி என முத்திரை குத்துதல்,போன்றவற்றால் இஸ்ரேல் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள், இஸ்ரேல் முழுமையான இராணுவவெற்றியை பெறுவதற்கு தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவரது வார்த்தைகளில்'நாங்கள் நேர்மையாக பேசுவோம்,உலகம் இஸ்ரேல் முழுமையான வெற்றியை பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது"
பல்வேறு வழிகளில் மிகவும் திறமையாக அழிக்கப்பட்ட நான்கு பயங்கரவாத அமைப்புகளை அவர் வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டினார்.

இராணுவமற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் அழிக்கப்பட்ட ஜாரிஸ்ட் ரஸ்யாவின் பிளக் ஹன்ட்ரட்ஸ், பெருவின் சைனிங் பாத் 1990களில் கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டது,தானாகவே முன்வந்து கலைந்துபோன ஜேர்மனியின் செம்படைஇஅரசியல் அமைப்பாக மாறி சின்பெய்னுடன் இணைந்த ஐரிஸ் விடுதலை இராணுவம்.

எலாட் ஐந்தாவது அதிகம் விவாதிக்கப்படாத உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார்- இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்தது.தென்னாசியாவில் பல தசாப்தங்களாக மிகவும் உறுதியான ஆயுதஅச்சுறுத்தலாக விளங்கிய அமைப்பு.

வெற்றியின் விரிவான தன்மை,மற்றும் அதனை சாத்தியமாக்க பயன்படுத்தப்பட்ட தீவிரமான,பெரும்பாலும் தார்மீக ரீதியிலான நடவடிக்கை காரணமாக இலங்கை அனுபவம் விதிவிலக்கானது என அவர் விவரித்தார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் சுதந்திர தமிழ் தேசத்தை உருவாக்குவதற்காக அந்த அமைப்பு 26 வருடங்களாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த குழு அதிநவீன இராணுவதிறன்களை வளர்த்துக்கொண்டது,தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது,அவர்களில் சிலர் பெண்கள் சிறுவர்கள்.

2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண்பதை கைவிட்டு விடுதலைப்புலிகளை முழுமையாக தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுத்தது.

இலங்கை தமிழ் புலிகளை தோற்கடித்தது எப்படி? இது இஸ்ரேலிற்கு ஏன் முக்கியமானது?

2006க்கும் 2009க்கும் இடையில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. இராணுவத்தை கணிசமான அளவு விரிவுபடுத்தவும்,மேம்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், ஆயிரக்கணக்கான புதிய வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் வளஙகள் ஒதுக்கப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் பல முனைகளில் இராணுவநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன,எதிரியின் பகுதிகளிற்குள்  ஊடுருவி விசேட படைப்பிரிவுகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

அதற்கு சமாந்திரமாக விடுதலைப்புலிகளிற்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தது.புலம்பெயர்ந்தவர்களின் நிதி சேகரிப்பை இலக்குவைத்ததுஇகுறிப்பாக கனடா பிரிட்டன் ஸ்கன்டினேவியன் நாடுகளில்.

விடுதலைப்புலிகளை உத்தியோகபூர்வதாக பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு பல மேற்குலக நாடுகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது.இதன் மூலம் அந்த அமைப்பின் ஆதரவு கட்டமைப்புகள் பலவற்றை மூடியது.

உளவியல் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.விடுதலைப்புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் இடையில் அதிருப்தியை அதிகரிப்பதற்காக தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.அந்த அமைப்பிலிருந்து விலகியவர்கள் ஒற்றர்களாக தகவல் வழங்குபவர்களை சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியில் முக்கிய பங்கை வகிக்கவில்லை என்கின்றார் எலாட்.

இறுதி அடி என்பது மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் வழிமுறை மூலம் சாத்தியமானது.யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்இபலர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஆனால் கடும் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியில் கொல்லப்பட்டனர்.

சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் மருத்துவமனைகளை இலக்குவைப்பதுபொதுமக்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தியதுஇதடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல்போனது போன்ற இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகளை ஆவணப்படுத்தியுள்ளன.

தமிழ் புலிகள் வெறுமனே பின்வாங்கச்செய்யப்படவில்லை அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்கின்றார் எலாட்.அவர்களிடமிருந்த பகுதி மீள கைப்பற்றப்பட்டது ,தலைமைத்துவம் அழிக்கப்பட்டது,2009ம் ஆண்டின் பின்னர் மீள எழுச்சி பெறுவதற்கான எந்த அறிகுறியையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தவில்லை.

2011 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் மதிப்பீடுகள் குறிப்பாக ஜனவரி மற்றும் மே 2009 க்கு இடையில் நடந்த சண்டையின் இறுதி மாதங்களில் 40000 முதல் 70000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இலங்கை அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை, உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகள் போராளிகள் என்று வலியுறுத்துகிறது.

மனிதாபிமான அமைப்புகள் மோதல் வலயங்களிற்குள்மண்டலங்களுக்குள் நுழையத் தடுக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டதாகவும் சாட்சிகள் வாயடைக்கப்பட்டதாகவும் அல்லது நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தார்மீக மற்றும் சட்ட மதிப்பீடுகள் சிக்கலாகின. பொதுமக்களின் இறப்புகளின் அளவு மோதலின் முடிவில் மிகவும் பிரச்சினைக்குரிய  அம்சங்களில் ஒன்றாக உள்ளது.
சர்வதேச  மௌனமாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களிடமிருந்து சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தால் அவை வெறுமனே நிராகரிக்கப்பட்டன.இதனால் அரசாங்கம் சில விளைவுகளை எதிர்கொள்ளநேர்ந்தது.
இதனை பயங்கரவாத அமைப்பொன்று முற்றாக அழிக்கப்பட்ட மிகவும் வழமைக்கு மாறான தருணம் என தெரிவித்தார் ஆனால்.பெரும் மனிதாபிமான விலை காரணமாக அது சர்ச்சையி;ல் சிக்குண்டது.

நீதியை விட புவிசார் அரசியலே மேற்குலகின்  பதிலை தீர்மானித்தது என்கின்றார் அவர் ,செப்டம்பர் 11க்கு பின்னர் இலங்கை தனது நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக முன்னிறுத்தியதால் பல நாடுகள் அதற்கு ஆதரவாகயிருந்தன.

அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களின் முயற்சிகள் குறைந்த வெற்றியையே அடைந்தன. கனடா மற்றும் இங்கிலாந்து மட்டுமே மிதமான தடைகளை விதித்தன அல்லது உதவியை நிறுத்தி வைத்தன. விரிவான சர்வதேச விசாரணை எதுவும் பின்பற்றப்படவில்லை.
இலங்கையும் மோதலை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக வெற்றிகரமாக சித்தரித்தது, அதன் நடவடிக்கைகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானவை என்றும் இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்ல என்றும் வாதிட்டது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கை சோர்வை எதிர்கொண்ட மேற்கத்திய நாடுகள் மோதலை விட கட்டுப்படுத்தலையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தன. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இருப்பிடமும் சீனாவுடனான வளர்ந்து வரும் உறவுகளும் மேற்கத்திய அரசாங்கங்களை உண்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்திருக்கலாம்.

நன்றி virakesari
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்