இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து போராடுவாரா மக்ரோன்..?? - மக்கள் கருத்து!!

24 வைகாசி 2025 சனி 19:40 | பார்வைகள் : 534
பிரான்சில் நிலவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து ஜனாதிபதி மக்ரோன் போராடுவார் எனும் நம்பிக்கை பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களிடம் இல்லை என கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
“இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எதிர்த்து ஜனாதிபதி மக்ரோன் சிறப்பாக போராடுகிறாரா?” எனும் கேள்வி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு 71% சதவீதமானவர்கள் ‘இல்லை’ (NON) என பதிலளித்துள்ளனர். 28% சதவீதமானவர்கள் ‘ஆம்’ (OUI) என பதிலளித்துள்ளனர்.
ஏனைய 1% சதவீதமானவர்கள் தங்களிடம் கருத்துக்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு CNEWS, JDD ம்ற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மே 22-23 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,001 பேர் பங்கேற்றிருந்தனர்.