Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : காவல்துறை வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மாணவன்!!

பரிஸ் : காவல்துறை வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மாணவன்!!

24 வைகாசி 2025 சனி 20:40 | பார்வைகள் : 441


காவல்துறை வீரர் ஒருவர் தாக்கியதாக 17 வயதுடைய உயர்கல்வி மாணவன் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN இடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மாற்றப்பட்டுள்ளன.

குறித்த மாணவன், கடந்த மே 7 ஆம் திகதி அன்று, PSG அணி வெற்றி பெற்றதை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அதன் போது காவல்துறை வீரர் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து, இந்த வழக்கினை பதிவு செய்துள்ளார்.

காவல்துறையினருக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளவோ, அவர்களை எதிர்த்து சண்டையிடவோ, ஏதேனும் பொருட்களை தூக்கி அவர்கள் மீது வீசவோ இல்லை எனவும், இருந்தபோது காவல்துறை வீரர் ஒருவர் தன்மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதை அடுத்து அவர் 8 நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் incapacité totale de travail விடுமுறை எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்