Paristamil Navigation Paristamil advert login

மரணத்திற்கு உதவும் சட்டம் வேண்டாம் வாழ உதவுங்கள்' – புதிய சட்டத்திற்கு எதிராக நோயாளிகள் போராட்டம்!

மரணத்திற்கு உதவும் சட்டம் வேண்டாம் வாழ உதவுங்கள்' – புதிய சட்டத்திற்கு எதிராக நோயாளிகள் போராட்டம்!

25 வைகாசி 2025 ஞாயிறு 11:33 | பார்வைகள் : 750


பிரான்ஸ் பாராளுமன்றத்தில் 'மரணத்திற்கு உதவும் உரிமை' (droit à l'aide à mourir) குறித்த புதிய சட்டம் செவ்வாயன்று (மே 27) வாக்கெடுப்புக்கு வர இருக்கிறது. இது சிக்கலான, பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுள்ள ஓர் உரிமையாகும்.

இத்துடன் தொடர்புடைய நோய்த்தடுப்புப் பராமரிப்பு (soins palliatifs)' குறித்த இன்னொரு சட்டமும் வாக்கெடுப்புக்கு வருகிறது.

இந்தச் சட்டமூலம் விவாதிக்கப்படுவதைக் கூட இந்த நேயாளிகள் விரும்பவில்லை. இது தங்கள் உயிரிற்கு முடிவுரை கட்ட அரசாங்கம் எடுக்கும் முடிவாகும். எங்களைப் பராமரிக்கும் மற்றும் மருந்துகளிற்காக மருத்துவக் காப்பீட்டின் பணத்தை மிச்சப்படுத்த அரசாங்கம் எங்களைக் கொல்ல முடிவெடுக்கினறது என நீண்டநாள் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்,  நான் தகுதி பெறுகிறேன் (#JesuisÉligible) என்ற ஹாஷ்டேக்குடன்பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் நடத்தினர்.

என் படுக்கையின் அருகே ஒரு ஒரு துப்பாக்கி வைத்திருப்பது போல் இந்தச் சட்டம் உள்ளது»
— Edwige Moutou) பார்கின்சன் நோயாளி

சட்டத் தகுதிகள் தெளிவற்றவை. நீண்டநாள் அல்லது சிக்கலான நோய்கள் உள்ள எவரும் தகுதி பெறலாம் - Magali Jeanteur, மருத்துவர், போராட்ட ஒழுங்குபடுத்துபவர்


நோயாளிகள் தாங்கள் பாரமாக உள்ளோம் என்ற குற்ற உணர்வு காரணமாக மரணத்தை தேர்வு செய்யக்கூடும் என்ற பயம்.

பாரிய உடல் நலம் பிரச்சனைகள், மனநலம் தொடர்பான நிலைகள் கூட இந்த சட்டத்தின் கீழ் 'மரணத்திற்கு தகுதி பெறும்' என எண்ணப்படுவதில் பதட்டம்.*

'எங்கள் வாழ்க்கை கடினமானது, சில நேரங்களில் நாம் விட்டுக்கொடுக்கத் தூண்டப்படும் நாட்கள் உள்ளன. அந்த நாளில், எங்களுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் விருப்பங்களை விட உதவியால் இறப்பது எளிதானது என்றால், பலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தூண்டப்படுவார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்,' என்று அவர் விளக்கினார்  சட்டம்

'மாற்றுத்திறனாளிகள் மீது மிகவும் கடுமையானது'

'பராமரிப்பிற்கான நெருக்கடியை சந்தித்து வரும் இந்த நேரத்தில், எங்களுக்கு வழங்கப்படும் தீர்வு வாழ்வதற்கு ஆதரவு மற்றும் உதவி அல்ல, இந்தச் சட்டம் இறப்பதற்கு மட்டும் உதவியை வலுப்படுத்துவதாகும்' என்று கிறிஸ்டின் போனிஃபாண்ட் வாதிட்டார், அவரது கணவர் maladie de Charcot  நோயுடன் 33 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

இப்படிப் பல தொடர் நோயாளிகள் கூட இறப்பதற்கு வழி வகுக்கும் இந்தச் சட்டத்தினால் அந்நம் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டம் செவ்வாயன்று (மே 27) வாக்கெடுப்பிற்கு வர இருக்கிறது அதன் பிறகு செனட்சபையிலும் (ளுéயெவ) விவாதிக்கப்படும், ஆனால் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்