சிக்கன் குருமா!

25 வைகாசி 2025 ஞாயிறு 14:36 | பார்வைகள் : 286
அனைவரது வீட்டில் சண்டே என்றாலே "நான் வெஜ்" தான். அதிலும் குறிப்பாக பலரது வீட்டில் சிக்கன் இல்லாமல் இருக்காது. ஒரே மாதிரி சிக்கன் சமைத்து போர் அடிக்குதா. இதுவரைக்கும் சிக்கன் பிரியாணி, சுக்கா, குழம்பு, வறுவல், 65 என பலவிதமான வகையில் சிக்கனை செய்து சாப்பிட்டிருப்போம்.ஆனாஇனி சிக்கன் எடுத்தால் இந்த வெள்ளை சிக்கன் குருமா செய்து பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த வெள்ளை சிக்கன் குருமா இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய்சோம்புகசகசாமுந்திரிபாதாம்எண்ணெய், இஞ்சி, பூண்டு, விழுதுபட்டை, கிராம்பு, ஏலக்காய்,பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, சின்ன வெங்காயம், தக்காளி, சிக்கன், கறிவேப்பிலை, கொத்தமல்லி மல்லித்தூள், உப்பு தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில், பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து அதனுடன் உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தக்காளி போட்டு வதக்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்... அதன் பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குழைந்து வந்தவுடன், அதில் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு மல்லித்தூள், தயிர் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் சேர்க்க மசாலா தயார் செய்ய வேண்டும்... அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஊற வைத்திருந்த முந்திரி பாதாம் சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து அந்த மசாலா விழுதை அதனுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான சிக்கன் வெள்ளை குருமா சாப்பிட தயாராகிவிடும். இதனை இட்லி தோசை, சப்பாத்தி, பூரி,இடியாப்பம் என அனைத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும்...