24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய X தளம்

25 வைகாசி 2025 ஞாயிறு 15:53 | பார்வைகள் : 324
24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக எக்ஸ் தளம் முடங்கியுள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக வலைத்தள தளமான எக்ஸ், இன்று மீண்டும் திடீரென முடங்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் எக்ஸ் முடங்குவது இது இரண்டாவது முறை என்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த முடக்கம் தொடங்கியது. இதனால், இந்திய பயனர்கள் எக்ஸ் தளத்தை அணுகவோ அல்லது அதில் தகவல்களை பகிரவோ முடியவில்லை.
புதிய பதிவுகளை பதிவிட முயன்றபோது, "ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்" என்ற பிழைச் செய்தியே தோன்றியது.
நேற்று அதிகாலை 1 மணியளவில் இதேபோன்றதொரு சர்வதேச அளவிலான முடக்கம் ஏற்பட்டது. அது குறுகிய நேரத்திலேயே சரிசெய்யப்பட்டது.
ஆனால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்பட்டிருப்பது, எக்ஸ் தளத்தின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் சமூக வலைத்தளப் பயனர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன.