Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க வழிகள்

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க வழிகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9535


 இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம். 

 
சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என்றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது. 
 
உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதியான வெளிப்படுத்தல்கள் போன்றவைகள் இதற்கு காரணமாக விளங்கலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மையையும் உண்டாக்கி விடுகிறது. 
 
பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்சனைகள், சீரில்லாத கருமுட்டை வெளிப்படுதல், ஹார்மோன் சமமின்மை, உடல் பருமன் போன்றவைகள். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் பதப்பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது உங்கள் கருத்தரிப்புத் திறனை வெகுவாக பாதிக்கும். மலட்டுத்தன்மையை தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
 
கருத்தரிப்புத் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வல்லுனர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட்டுத்தன்மை ஏற்படும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். 
 
ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளை கண்டறிந்தால் மலட்டுத்தன்மையை தவிர்க்கலாம். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹார்மோன் சமமின்மையை உண்டாக்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும். 
 
பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசியமானதாகும். 
 
பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்திட வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையே உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்தையும் கூறி விடும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுத்திடுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்