Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் மே தின பேரணிகள்: பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

நாடு முழுவதும் மே தின பேரணிகள்: பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

30 சித்திரை 2025 புதன் 14:34 | பார்வைகள் : 452


மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  முக்கிய நகரங்களான பரிஸ், மார்செய், லியோன் மற்றும் நாந்தில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் இளையோர் அமைப்புகள் தேசிய அளவில் வழக்கம் போலவே பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன. 

இப்போராட்டம்கள் தீவிர வலதுசாரியை எதிர்த்து அமைதி, சுதந்திரம் மற்றும் சமூக நீதி கேட்டும் நடைபெறவுள்ளது. மதியம் 2 மணிக்கு பரிஸ் 10இல் தொடங்கி Nation வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்குமேல் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் பாதுகாப்பு குறித்து கடும் எச்சரிக்கைகள் விடுத்துள்ளார்; போராட்டங்களில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொழிலாளர்களுக்கான சர்வதேச தினம் என்பதுடன், இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று போராட்டக்குழுக்கள் கூறுகின்றன. டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து தீவிர வலதுசாரிகள் உலகளவில் அதிகரித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

பாலஸ்தீனர்களும் உக்ரைனியர்களும் சந்திக்கும் கொடுமைகளுக்கு எதிராகவும், உலகத் தொழிலாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்