குடியேற்றததைக் கட்டுப்படுத்த வாக்கெடுப்புத் தேவை!!

6 வைகாசி 2025 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 534
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தற்போதைய உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ இன்றும் குடியேற்றம் (immigration) பற்றியே பேசி உள்ளார்.
தனது தேர்தல் உத்தியாக வெளிநாட்டவர்களைக் குறிவைக்கும் இன்று செவ்வாய்க்கிழமையும் குடியேற்றவாதிகள் பறறிக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
«குடியேற்றம் குறித்து, மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பொது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கக்கூடிய அரசியலமைப்பின் திருத்தம் நமக்குத் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்»
என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டத் திருத்தத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டவர்களை உடனடியாக நாட்டிற்குத் திருப்பியனுப்பவும், குடியேற்றவாதிகளைக் கட்டுப்படுத்தவும், தொடர்ச்சியாக செவ்விகளை புரூனோ ரத்தையோ வழங்கி வருகின்றார்.