Paristamil Navigation Paristamil advert login

மிதவாதி என்றும் விவேகமுள்ளவர் என்றும் சொல்லப்படும் புதிய பாப்பரசர் யார்?

மிதவாதி என்றும் விவேகமுள்ளவர் என்றும் சொல்லப்படும் புதிய பாப்பரசர் யார்?

8 வைகாசி 2025 வியாழன் 23:48 | பார்வைகள் : 346


 

ரொபேர்ட் பிரான்சிஸ் பிரெவோஸ்ட் (Robert Francis Prevost)  என்ற 69 வயதுடைய, புதிய பாப்பரசர் லியோன் XIV ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இது பாப்பரசர் பிரான்சிஸ் மறைந்த 17 நாட்களில் நடந்துள்ளது. இவர் வத்திக்கானில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவமுள்ளவர் மற்றும் தனது மிதமான பாணியுடன் பிரபலமானவர். 

2023இல் கார்டினல் ஆக நியமிக்கப்பட்டவர், முதன்மையாக எளிமை மற்றும் கவனமான அணுகுமுறையை கடைபிடிப்பவர் என்றும் கூறப்படுகிறார். "சமாதானம் உங்களோடு இருக்கட்டும்!" என ஆரம்பித்த அவரது உரையில், தன்னை தேர்ந்தெடுத்த கார்டினல்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பெரு (Pérou) நாட்டில் மக்களுக்கு மதத்தைப் போதித்த ரொபேர்ட் பிரான்சிஸ் பிரெவோஸ்ட், அமெரிக்காவின் சிக்காகோவில் (Chicago) பிறந்தவர். இவர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லனோவா பல்கலைக்கழகத்தில் (l'Université Villanova- Pennsylvanie) கணிதம் மற்றும் தத்துவம் படித்தவர். 

2023 முதல், லத்தீன் அமெரிக்காவிற்கு பொறுப்பான "Dicastère des évêques" அமைப்பின் தலைவரான இவர் ஒரு மிதமான முற்போக்கானவராகக் கருதப்படுகிறார். 

இவருடைய புதிய பதவி திருச்சபைக்கு முன்னேற்றம் தரும் சவால்களை எதிர்கொள்வதாக கருதப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்