போர் ஒத்திகை எதிரொலி.... 54 ஆண்டுகளுக்கு பிறகு அமிர்தசரஸ் பொற்கோயிலின் விளக்குகள் அணைப்பு

9 வைகாசி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 335
போர் ஒத்திகை காரணமாக அமிர்தசரஸ் பொற்கோயிலின் விளக்குகள் 54 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கப்பட்டுள்ளன.
இந்திய மாநிலமான பஞ்சாப், அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலம் அமிர்தசரஸ் பொற்கோயில். இந்த கோயிலானது கடந்த 1577-ம் ஆண்டில் சீக்கிய குருவான குரு ராம் தாஸ் என்பவரால் நிறுவப்பட்டது.
இக்கோயில் பொதுவாக பொற்கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கும் சிறப்பு உயர் தொழில்நுட்ப விளக்கு அமைப்புடன் கூடிய விளக்குகள் போற்றப்படுகின்றன.
இந்த கோயில் உருவாக்கப்பட்டதில் இருந்தே விளக்குகள் அணைக்கப்படாமல் இருந்தன. ஆனால், இந்த விளக்குகள் நேற்று இரவு 10.30 முதல் 11.00 மணிவரை விளக்குகள் அணைக்கப்பட்டன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போர் பதற்றம் காரணமாக மாநில அரசுகள் போர் ஒத்திகையை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அமிர்தசரஸ் பொற்கோயில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கிறது.
சீக்கிய நடத்தை விதிகள் காரணமாக கருவறை மற்றும் 'பர்காஷ்' விழா தொடங்கப்பட்ட இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டது.