உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்....!
10 ஆனி 2023 சனி 11:04 | பார்வைகள் : 6065
உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனை. தொப்பையை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த பிரச்சனைக்கு சில பொதுவான தீர்வுகள் உள்ளன. ஜிம்மிற்குச் செல்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் டயட்டை மாற்றுவது போன்ற சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவது தான். வழக்கமான உடற்பயிற்சியுடன் உணவு முறையில் சிறிது மாற்றம் செய்தாலே உடல் பருமனை எளிதாக குறைக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்கள் என்னென்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
கிரீன் டீ : ஹெல்த்லைனில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி.. உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு கிரீன் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடை அதிகரித்தால் கிரீன் டீ குடிக்கலாம். க்ரீன் டீயை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் உள்ள காஃபின் மற்றும் கேட்டசின்கள் (catechins) மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கிறது.
கற்றாழை நீர் : உடலில் கொழுப்பு அதிகரிப்பதால் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. உடல் பருமன் அதிகரிக்கும் போது, வயிறும் துருத்திக் கொள்ளும். அப்படியானால், மற்ற நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது என அர்த்தம். கற்றாழை உடல் பருமனை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கற்றாழை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் எடை கட்டுப்படும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் தொப்பையும் குறையும்.
பெருஞ்சீரகம் நீர்: பெருஞ்சீரகம் நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். உடல் பருமனை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும்.எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.