Paristamil Navigation Paristamil advert login

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

17 சித்திரை 2023 திங்கள் 14:12 | பார்வைகள் : 9011


 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறுவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 
தினமும் ஒரு வாழைப்பழம் என்ற வகையில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை ஆகிவற்றை சாப்பிடலாம் என்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் பூவம் பழம், ரஸ்தாலி நாட்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் அதில் இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. ஆனால் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்