கொய்யா இலையில் கொட்டிக்கிடக்கும் மருத்துவம்!
21 பங்குனி 2023 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 5336
கொய்யா இலை உங்களுக்கு பல வகைகளில் நன்மை தருகின்றன. அப்படி அவற்றில் என்னென்ன நன்மைகள் உள்ளன, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
காயங்களை ஆற்றுகிறது : கொய்யா இலைகள் அறுவை சிகிச்சை காயங்கள், தீக்காயங்கள், சரும ஒவ்வாமை போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இந்த காயங்களுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது. பைட்டோகெமிக்கல் ஸ்கிரீனிங் மூலம் கொய்யா இலையில் நுண்ணுயிர் எதிர்ப்பி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில உயிரியக்க கலவைகள் இருப்பதை வெளிப்படுத்தியது.
கல்லீரல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது : அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகம் மற்றும் டாமன்ஹூர் பல்கலைக்கழகம் இனைந்து நடத்திய ஆய்வில் குடல் தொந்தரவுகளுக்கு கொய்யா இலையில் பலன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதற்கு கொய்யா இலைகளில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி பண்பு இருப்பதே காரணம் என்கின்றனர். அதோடு கொழுப்பை குறைக்கும் ஆற்றலும் இதில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கூடுதல் பலம் என்கிறது இந்த ஆய்வு. அதோடு நுண்ணிய ஒட்டுண்ணிகளால் உண்டாகக்கூடிய Giardia infection என்னும் குடல் தொற்றுக்கு கொய்யா இலை சிறந்த தீர்வு என் உறுதியளிக்கிறது. வயிறு பிடிப்பு, வயிறு மந்தம், வாந்தி, வயிற்றுப்போக்கு கொய்யா சிறந்த மருந்தாக செயல்படுவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்து : புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் Admac Oncology 2010 ஆண்டு வெளியிட்ட ஆய்வில் கொய்யா இலை புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என்று கூறியுள்ளது. அந்த ஆய்வில் கொய்யா இலையின் சாறுகள் புற்றுநோய் கட்டியின் அளவை குறைப்பதை கண்டறிந்துள்ளனர். மற்றொரு ஆய்வான Journal of Medicinal Food, கொய்யா இலைகளில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் இருப்பதாகவும் அது ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து என்றும் கூறியுள்ளனர்.
உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்தது : ஆய்வில் இயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமான அளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆய்வில், கலந்துகொண்டவர்களின் மொத்த கொழுப்பு (9.9 சதவீதம்), ட்ரைகிளிசரைடுகள் (7.7 சதவீதம்), மற்றும் இரத்த அழுத்தங்கள் (9.0/8.0 மிமீ எச்ஜி) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நிகரக் குறைவு காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொய்யாப் பழத்தை 12 வாரங்களுக்கு கொடுத்த பிறகு கொழுப்பு புரதம் 8.0 சதவீதம் குறைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கரை அளவை குறைக்கிறது : கொய்யா இலையின் சாறு இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. காரணம் அதற்கு இன்சுலின் தட்டுப்பாட்டை சீராக்கும் ஆற்றல் உள்ளது.
மாதவிடாய் வலியை குறைக்கிறது : மாதவிடாய் வலியால் அவதிப்படும் 197 பெண்களை இரு குழுக்களாக பிரித்து அதில் ஒரு குழுவுக்கு கொய்யா இலை சாறிலிருந்து தயாரிக்கப்பட்ட Phyto-drug (Psidii guajavae folium extract) என்னும் மருந்தை ஒரு நாளைக்கு 6 mg கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு குழுவுக்கு வழக்கமான சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொய்யா இலை சாறு மருந்து அருந்திய பெண்களுக்கும் வயிறு பிடிப்பு , வயிற்று வலி குறைந்தது தெரிய வந்துள்ளது.
முகப்பரு, சரும பாதிப்புகளுக்கு சிறந்தது : முகப்பருவுக்கு காரணமாக பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொய்யா இலை சாறில் இருப்பதை Jordanian study நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. காரணம் இதில் ஆன்டி மைக்ரோபையல் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேஷன் பண்புகள் இருப்பதே ஆகும். அதோடு தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற அறிகுறிகளுக்கும் கொய்யா இலை உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி : கொய்யா இலை சாறு அதிக அளவிலா நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் நோய் தொற்று வராமல் பாதுகாக்கிறது.
.
முடி கொட்டுவதை நிறுத்த உதவுகிறது : கையளவு கொய்யா இலைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரை காய வைக்கவும். நீர் குளிர்ந்த பின் டமுடியின் வேர்களில் படும்படி தடவி 2 மணி நேரம் காய வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ நல்ல பலன் கிடைக்கும்.