Paristamil Navigation Paristamil advert login

அழகுடன் ஆரோக்கியம் தரும் குங்குமப்பூ!

அழகுடன் ஆரோக்கியம் தரும் குங்குமப்பூ!

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9685


ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது தனக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்க வேண்டும் என்று குங்கும்ப்பூவை பாலில் கலந்து குடிப்பார்கள்.

குங்குமப்பூ நல்ல நிறத்தை மட்டுமல்ல மனிதனின் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள்.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

மேலும் சில பயன்கள்

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்