Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறதா?

ஆப்பிள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறதா?

13 மாசி 2023 திங்கள் 17:03 | பார்வைகள் : 4500


 தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.  ஆப்பிளில் வைட்டமின் சி சீரான அளவில் உள்ளது.

 
ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் பாதையில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கிறது.
 
ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருக்க உதவும். ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
 
ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
 
வயதானவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும் முகச்சுருக்கங்களை போக்க ஆப்பிள் ஒரு சிறந்த நிவாரணியாகும். ஆப்பிளை மையாக அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும்.
 
ஆப்பிள் பழமானது குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவித ஆபத்தான புற்று நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்