Paristamil Navigation Paristamil advert login

காபி குடித்தால் உடல் எடை குறையுமா?

காபி குடித்தால் உடல் எடை குறையுமா?

16 தை 2023 திங்கள் 13:06 | பார்வைகள் : 4253


 காபியில் உள்ள காஃபின் உடல் நலத்திற்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் அளவோடு சாப்பிட வேண்டும் என எச்சரிக்கும் இந்நேரத்தில் எப்படி உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது என்றும் காபி குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகிறது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

 
பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் எடை அதிகரிப்புதான். தேவையில்லாத ஸ்நாக்ஸ், நேரம் தவறி சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவரின் உடல் எடை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் உணவியல் நிபுணர் மேம் சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக காபி குடிக்க வேண்டும் என்கிறார். எப்படி தெரியுமா? காஃபின் இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்க உதவியாக உள்ளது. மேலும் வளர்சிதை மாற்ற விகிதத்தை 3-11 சதவீதம் அதிகரிக்கிறது எனவும், சோர்வை நீக்கி உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரிக்கவும் காபி உதவியாக உள்ளது.
 
இதோடு மட்டுமின்றி பசியைக் குறைப்பதால் தேவையில்லாத ஸ்நாக்ஸ் சாப்பிடுவதையும் நாம் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு பல்வேறு நன்மைகள் காபி அருந்துவதன் மூலம் கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாக அருந்தக்கூடாது. குறிப்பாக நாள் ஒன்று 2-3 கப் காபிக்கு மேல் ஒருவர் உட்கொள்ளும் போது இதயப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும், காபியில் அதிக பால் சேர்க்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கின்றனர். மேலும் கருவுற்ற பெண்கள் காபியின் அளவைக்குறைத்துக் கொள்வது வயிற்றில் உள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்.
 
நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், தியோபிலின், பினோதியாசின்கள், ஆன்டிகோகுலண்ட் மருந்துகள்,டிரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ், ஆஸ்துமா மருந்துகள், கருத்தடை மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் காபியை எடுத்துக்கொள்ளக்கூடாது.
 
இதேப்போன்று ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமிற்கு மேல் காஃபின் உட்கொள்ளும் போது உடல் நடுக்கம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிப்பதால் அளவுக்கு மீறி குடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்