தூங்கும் போதே உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா..?
4 தை 2023 புதன் 05:54 | பார்வைகள் : 5318
இரவில் தூங்க செல்லும் முன் உடல் எடையை சரிபார்த்து விட்டு, காலையில் தூங்கி எழுந்ததும் மீண்டும் செக் செய்தால் எடை குறைந்திருக்கும். இரவு முழுவதும் தூக்கத்தில் நீங்கள் சுவாசித்து மற்றும் வியர்வை காரணமாக உடலில் தண்ணீர் குறைவதால்எடை தானாகவே குறைந்திருக்கும். கொழுப்பின் இழப்பை விட நீர் எடை இழப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் நிம்மதியான உறக்கம் இல்லாமல் இருப்பது, குறைந்த மணிநேரமே தூங்குவது உள்ளிட்ட மோசமான இரவு தூக்க பழக்கங்கள் எடையை அதிகரிக்க செய்யலாம்.
இதற்கான காரணங்கள் பின்வருமாறு :இரவில் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் கார்டிசோல் அளவு அதிகரிப்பது குடலில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்மறையாக பாதிக்கிறது. இறுதியில் நுண்ணுயிரிகளின் அளவுகளில் ஏற்படும் சமநிலையின்மை வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. தூக்கமின்மை பசி ஹார்மோன்களை தொந்தரவு செய்வதால் தேவையற்ற நேரத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிட தூண்டுகிறது. இப்பழக்கம் ரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு காரணமாகி எடை அதிகரிப்பு உட்பட பிற கோளாறுகளுக்கு காரணமாகிறது. வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், தூங்கும் போது எடையை இழக்கவும் உதவும் வழிகள் பற்றி பார்ப்போம்.,
மாலை நேர உடற்பயிற்சிகள் : அலுவலக வேலைகளை முடித்து வீடு திரும்பி சிறிது நேர ஓய்விற்கு பிறகு மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் மூலம் வளர்சிதை மாற்ற விகிதத்தை 16 மணிநேரம் வரை அதிகரிக்கலாம் என்று நீரிழிவு நோய் தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சாப்பிடுவதற்கு முன்பான ரத்த குளுக்கோஸ், இன்சுலின், கொழுப்பு, ட்ரையசில்கிளிசரால் மற்றும் எல்டிஎல்-கொலஸ்ட்ரால் செறிவுகள் மாலை உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு குறைந்துள்ளதை ஆய்வு காட்டி இருக்கிறது.
கேசீன் புரோட்டின் ஷேக் (casein protein shake) : ஆண்களின் உடல்நலம் பற்றிய நிபுணர்களின் ஆய்வு கட்டுரை ஒன்றில், மாலை நேர உடற்பயிற்சிக்கு பின் கேசீன் புரோட்டின் ஷேக் எடுத்து கொள்வதன் மூலம் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்லோ-ரீலீஸ் புரோட்டின் 8 மணி நேரத்திற்குள் படிப்படியாக செரிக்கப்படுகிறது மற்றும் வளர்சிதை மாற்றதிற்கு இரவு முழுவதும் உதவுகிறது. அமினோ ஆசிட்டை மெதுவாக வெளியிடும் இந்த ஷேக்கை தூங்க செல்லும் முன் எடுத்து கொள்வது சிறந்த பலனை தரும்.
பச்சை தண்ணீர் குளியல் : நம் உடலில் வெள்ளை கொழுப்பு மற்றும் பிரவுன் கொழுப்பு என 2 வகை கொழுப்புகள் இருக்கின்றன. இதில் , பிரவுன் கொழுப்பு உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இந்த கொழுப்பு வளர்சிதை மாற்ற செயலில் உள்ளது மற்றும் கலோரிகளையும் எரிக்கிறது. தூங்கும் நேரத்தில் பிரவுன் கொழுப்பு கரையும் போது சுமார் 400 கலோரிகள் வரை கரையும். படுக்கைக்கு செல்லும் முன் பச்சை தண்ணீரில் குளிப்பது அதிக பிரவுன் கொழுப்பு கழுத்து மற்றும் தோள்களின் பின்புறத்தில் சேமிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கிரீன் டீ : கிரீன் டீயில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள் (flavonoids) வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கின்றன. படுக்கைக்கு செல்லும் முன் நீங்கள் அருந்தும் கிரீன் டீ மூன்றாவது கப்பாக இருப்பின், ஒரே இரவில் 3.5% வரை அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
குளிர்ந்த ரூம் : ரூம் ஹீட்டர் பொருத்தப்பட்ட ரூமில் தூங்குவது உடலில் கொழுப்பை சேர்க்கிறது. ஆற்றலைச் சேமிக்க கொழுப்பு செல்களை பயன்படுத்துவதால் குளிர் சூழலில் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த அந்த கலோரிகளை பயன்படுத்தும் வகையில் நமது உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இயற்கையான முறையில் குளிர்ச்சி நிலவும் ரூமில் படுத்து உறங்குவது, உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.