Paristamil Navigation Paristamil advert login

சேலத்தில் இ.பி.எஸ்., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலத்தில் இ.பி.எஸ்., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

25 வைகாசி 2025 ஞாயிறு 19:18 | பார்வைகள் : 224


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சேலத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் சூரமங்கலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., இல்லம் உள்ளது. அவரது இந்த வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றிய தகவலறிந்த போலீசார், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில், வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இ.பி.எஸ்., இல்லத்திற்கு கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்